மாரியம்மன் திருக்கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

மாரியம்மன் திருக்கோவிலுக்கு இந்து சமய அறநிலை துறையின் சார்பாக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை;

Update: 2025-06-27 14:20 GMT
குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஊராட்சி J.J. நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு இந்து சமய அறநிலை துறையின் சார்பாக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் .K.S.மூர்த்தி . அவர்களின் ஆலோசனைப்படி பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்கள் கலந்து கொண்டு நடைபெறவிருக்கும் பணியை துவக்கி வைத்தார். மேலும் உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.வேலுமணி அவர்கள், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் திரு.S.N.சௌந்தரம், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் திரு.M.R.ராஜேந்திரன் , கிளைக் கழகச் செயலாளர் திரு.சுப்பிரமணி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மணிவண்ணன், கார்த்தி, இளங்கோ, தினேஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Similar News