குமரி மாவட்டம் இரணியல் மாடத் தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார் கொத்தனார். இவரது மனைவி சோனியா. இந்த தம்பதிக்கு 13 வயதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இவர்களை அருகில் வசிக்கும் சோனியா தாயார் ேரோஸ் மேரி அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம். கடந்த மே மாதம் 16ஆம் தேதி ரோஸ்மேரி சென்றபோது சுகன்யா, அனிஷ் குமார் ஆகிய இரண்டு பேரும் சோகமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மாலையில் சுகன்யாவின் சகோதரி போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனிடைய அந்த பகுதியில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் மூன்று பேரையும் அடுத்த நாள் வேளாங்கண்ணியில் பார்த்து உள்ளனர். அப்போது ஒரு வாரம் சுற்று வந்ததாகவும் பின்னர் வீடு திரும்ப உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியது போல் வீடு திரும்பவில்லை. ஜூன் 2-ம் தேதி பள்ளி திறந்த போதும் மாணவி பள்ளிக்கு அனுப்பவும் ஊருக்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ரோஸ்மேரி இரணியில் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.