குமரியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தனிப்படையினர் பிடித்தனர்;

Update: 2025-06-27 14:50 GMT
கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடிய சம்பவத்திலும் போலீசார் திருட்டில் ஈடுபட்ட முட்டம் பகுதியைச் சார்ந்த நிக்சன் 28 என்பவரை வலை வசி தேடி வந்தனர். தொடர்ந்து திருட்டு நடந்த இடங்களோடு தொடர்புடைய பல பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. பல இடங்களில் விசாரணை செய்ததில் நேற்று வடசேரியிலிருந்து வெள்ளமடம் நோக்கி நிக்சன் சென்றதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ் ஐ அஜய்ராஜா தலைமையிலான போலீசார் நிக்சனை மடக்கிப்பிடித்தனர். மேலும் அவரிடம் விசாரித்த போது அவர் வெள்ளமடத்திலும் பைக் திருடிலும் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டு வழக்கில் இருந்து தப்பி செல்வதற்காக இன்று வெளிநாடு செல்லவும் நிக்சன் திட்டமிட்டு இருந்ததும் போலீசார் விசாரணை தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நிக்சனை மேலும் விசாரித்து வருகின்றனர்.

Similar News