நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி

காவல்துறை விசாரணை;

Update: 2025-06-27 16:00 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி போதை சாமியார் கைது....... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40) இவர் காய்கறி விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே இதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 54) என்பவர் குறி சொல்லும் சாமியாராக உள்ளார்.நேற்று இரவு சாமியார் சிவகுமார் நாகராஜிடம் தனக்கு மது வாங்கி வருமாறு பணம் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் மதுவை குடித்து விட்டு நாகராஜுக்கு மனநிலை சரியில்லை என அக்கம் பக்கம் பேசுவதாக கூறி சிறப்பு பூஜை செய்கிறேன் என அவரை வைத்து குடிபோதையில் பூஜை செய்துள்ளார்.திருநீர் மற்றும் குங்குமம் ஆகியவற்றை அவர் மீது வீசி, ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து தலை மற்றும் நெற்றி பகுதியில் குத்தியுள்ளார். இதில் வலி தாங்காமல் அலறியடித்து நாகராஜ் வெளியே ஓடிவந்துள்ளார். பின்னர் அக்கம்,பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகராஜை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்தவுடன் கொலகம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு போலி சாமியார் சிவக்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்றனர் விசாரணையில் . கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறி சொல்வதாக கூறி சாமியார் என்ற போர்வையில் இப்பகுதி மக்களை இவர் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.24 மணி நேரமும் போதையில் இவர் இருப்பார் எனவும்,சிவராத்திரி மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை என்ற பெயரில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவரது வீட்டிற்கு வந்து வழிபாடுகளில் பங்கேற்று செல்வதாகவும், உள்ளூர்வாசிகளை நம்ப வைக்கும் வகையில் பல சித்து விளையாட்டுகளையும் நடத்தியுள்ளார் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .போலி சாமியாரின் இந்த நடவடிக்கையால் நேற்று இரவு இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு பின்பு கொலக்கம்பை காவல்துறையினர் போலி சாமியார் சிவகுமாரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40) இவர் காய்கறி விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே இதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 54) என்பவர் குறி சொல்லும் சாமியாராக உள்ளார்.நேற்று இரவு சாமியார் சிவகுமார் நாகராஜிடம் தனக்கு மது வாங்கி வருமாறு பணம் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் மதுவை குடித்து விட்டு நாகராஜுக்கு மனநிலை சரியில்லை என அக்கம் பக்கம் பேசுவதாக கூறி சிறப்பு பூஜை செய்கிறேன் என அவரை வைத்து குடிபோதையில் பூஜை செய்துள்ளார்.திருநீர் மற்றும் குங்குமம் ஆகியவற்றை அவர் மீது வீசி, ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து தலை மற்றும் நெற்றி பகுதியில் குத்தியுள்ளார். இதில் வலி தாங்காமல் அலறியடித்து நாகராஜ் வெளியே ஓடிவந்துள்ளார். பின்னர் அக்கம்,பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகராஜை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்தவுடன் கொலகம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு போலி சாமியார் சிவக்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்றனர் விசாரணையில் . கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறி சொல்வதாக கூறி சாமியார் என்ற போர்வையில் இப்பகுதி மக்களை இவர் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.24 மணி நேரமும் போதையில் இவர் இருப்பார் எனவும்,சிவராத்திரி மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை என்ற பெயரில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவரது வீட்டிற்கு வந்து வழிபாடுகளில் பங்கேற்று செல்வதாகவும், உள்ளூர்வாசிகளை நம்ப வைக்கும் வகையில் பல சித்து விளையாட்டுகளையும் நடத்தியுள்ளார் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .போலி சாமியாரின் இந்த நடவடிக்கையால் நேற்று இரவு இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு பின்பு கொலக்கம்பை காவல்துறையினர் போலி சாமியார் சிவகுமாரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News