அபாயகரமாக உள்ள மின் மாற்றி ஆபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை .

விரைந்து முடிக்க கோரிக்கை;

Update: 2025-06-27 16:04 GMT
அபாயகரமாக உள்ள மின் மாற்றி ஆபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை ................................. நீலகிரி மாவட்டம் உதகை மையப் பகுதியில் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது பள்ளி செல்லும் நடைபாதையில் மின் மாற்றி ஒன்று உள்ளது தொடர் மழையினால் அப்பகுதி நடைபாதை சிறிது சிறிதாக பிளவு ஏற்பட்டுள்ளது மின்மாற்றி உள்ள நடைபாதையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வெல்டிங் ஒர்க் ஷாப் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் என நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதாகவும் பெரு மழை ஏற்பட்டால் இந்த நடைபாதை முற்றிலுமாக பிளவு ஏற்பட்டு மின்மாற்றி விழும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் தற்போது வரை எவ்வித பலனும் இல்லை எனவும் கூறுகின்றனர் எனவே பெரும் ஆபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

Similar News