ஆ.இராசாவின் முரட்டுபக்தருக்கு கட்சியினர் பொது மக்கள் நண்பர்கள் வாழ்த்து
சிறந்த களபணியாளருக்கு உரிய பதவி கட்சியினர் மகிழ்ச்சி வரவேற்பு;
ஆ.இராசாவின் முரட்டுபக்தருக்கு கட்சியினர் பொது மக்கள் நண்பர்கள் வாழ்த்து சிறந்த களபணியாளருக்கு உரிய பதவி கட்சியினர் மகிழ்ச்சி வரவேற்பு நீலகிரி மாவட்ட திமுக கழகத்தில், சமீபத்தில் வெளியான பொறுப்பாளர் அறிவிப்பில், அரசியல் மற்றும் சமூக பணியில் தன்னித்த அடையாளம் அமைத்த தகுதியான நிர்வாகியான மாங்கோடுராஜா என அழைக்கபடும் ராஜ்குமாருக்கு முக்கிய பொறுப்பாக ஒன்றிய செயலாளர் பதவி. வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அனைத்துத் தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது. பழமைவாய்ந்த நீலகிரி மாவட்டத்தில், திமுக சார்பில் பணியாற்றி வரும் இந்த நிர்வாகி, கட்சிமற்றும் கட்சியினர் முன்னேற்றம், கல்வி விழிப்புணர்வு, மற்றும் திமுக அரசின் சமூக நலத்திட்டங்களை மக்கள் இடையே கொண்டு சேர்க்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ளார். இவரது நிலையான கட்சிபணி, கட்சியினுள் நம்பிக்கையையும், மக்களிடையே நெருக்கத்தையும் உருவாக்கியதற்கேற்ப, இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த முக்கியப் பதவியை ஏற்கும் போது, “இது ஒரு பெரும் பொறுப்பு; மக்களுக்காக மற்றும் கட்சிக்காக இன்னும் அதிகம் பணியாற்றுவேன் என கூறியுள்ளார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான எங்கள் உயிரான தளபதியாருக்கு என்றும் உறுதுணையாக நிற்போம் மலைமாவட்ட மக்களின் மனதில் நீக்கமற வாழும் கட்சியின் துணை பொது செயலாளரும் எனது அரசியல் நம்பிக்கையுமான நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களின் சீரிய தலைமையில் மாவட்ட.பொறுப்பாளர் கே.எம்.ராஜி வழிகாட்டுதல் படி மிகசிறப்பான கட்சிபணியை ஆற்றுவேன் என உறுதியுடன் என மாங்கோடு ராஜா கூறினார் இத்தகவல் வெளியாகிய உடனேயே, நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். கிளை செயலாளர், ஒருங்கிணைந்த பந்தலூர் ஒன்றிய செயலாளர் ,பொது குழு உறுப்பினர் என அரசியலில் ஏறுமுகத்தில் உள்ள மாங்கோடு ராஜாவுக்கு மலைமாவட்ட மக்களின் நமபிக்கையாய் உள்ள கட்சியின் துணை பொது செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களின் ஆசியோடு அபாரம் புரிவார் என கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.