வளந்தி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
அருள்மிகு வளந்தி அம்மன் கோயிலில் இன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் வளத்தூர் அருகே அருள்மிகு வளந்தி அம்மன் கோயிலில் இன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு குங்குமம், சந்தனம் கொண்டு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.