குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் டேனியல். தொழிலாளி. இவரது மகள் அபினா (17). பிளஸ் 2 முடித்துவிட்டு தையல் வகுப்பு சென்று வருகிறார். நேற்று முன் தினம் காலை வழக்கம் போல தையல் வகுப்புக்கு சென்ற அபினா மாலையில் வீடு திரும்பவில்லை. இதை அடுத்து பெற்றோர் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. டேனியல் தனது மகனின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் தேடினார். ஆனால் அபினா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை எடுத்து அவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபினா எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.