சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்க வேண்டும்: மனு!
தூத்துக்குடியிலுள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு காம்பவுண்டு சுவர் மற்றும் சில அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.;
தூத்துக்குடியிலுள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு காம்பவுண்டு சுவர் மற்றும் சில அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடியில் 136 கோடி செலவில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள சுற்றுச் சுவர் கட்டுவதற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிகிறது. ஆகவே காம்பவுண்டு சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். அதோடு நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் உணவுக்கூடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறோம். மேலும் தற்போதுள்ள மருத்துவமனையிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை 2 கி.மீ. தள்ளியிருப்பதால் நோயாளிகளை அங்கு கொண்டு செல்வதற்கு இன்டென்சிவ் கேர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துமாறு வேண்டுகிறோம். மேலும் இந்த புதிய மருத்துவமனையில் சோலார் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். மேற்கண்ட கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.