சங்கரன்கோவிலில் நாட்டுப்புற கலைஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

நாட்டுப்புற கலைஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-28 03:35 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி மாவட்ட வில்லிசை, நையாண்டி மேளம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார், கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சிவகிரி தனி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி. கல்வித்துறை -ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வில்லிசை , நையாண்டி மேளம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Similar News