கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-06-28 03:40 GMT
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தெய்வீகன் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடையில் 'புளூடூத்' மூலம் மின்னணு, எடை தராசு இணைக்கப்பட்டதால் ஒரு நாளுக்கு, 50 பேருக்கு மேல் பொருட்கள் விநியோகிக்க முடியாமல் உள்ளதை சரிசெய்ய வேண்டும்; அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை செய்வதை உறுதிபடுத்துதல்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Similar News