மனைவி மாயமானதால் விரக்தி கணவர் தற்கொலை

தற்கொலை;

Update: 2025-06-28 03:45 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா மணலுார் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ், 49; இவரது மனைவி கலைச்செல்வி, 43; இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன், திடீரென மாயமானார். இதனால் கனகராஜ் கடும் மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று அவரது நிலத்தில் உள்ள தேக்கு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News