சத்யசாயி சேவா நிறுவன மாவட்ட சாதனா முகாம்

முகாம்;

Update: 2025-06-28 04:08 GMT
சின்னசேலத்தில் சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் மாவட்ட அளவி லான சாதனா முகாம் நடந்தது. Advertisement விழுப்புரம் மாவட்ட சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கன்வீனர் கணேசன் வரவேற்றார். கடலுார் மாவட்ட தலைவர் சாய் பிரசாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.கலந்துரையாடலை தொடர்ந்து, மாவட்டத்தில், 2 ஆயிரம் சேவாதாரர்களை இணைத்து பிரசாந்தி சேவாவை நடத்திட வலியுறுத்தப்பட்டது. முகாமினை மாவட்ட பொறுப்பாளர்கள் சேரன், கிருஷ்ணா, கண்ணம்மா, சாய்பிரியா, விஜயா மற்றும் கன்வீனர்கள் பூரா மூர்த்தி, ஜெயராம், கணேசன், வைரமூர்த்தி உள்ளிட் டோர் ஒருங்கிணைத்தனர்.

Similar News