கால்வாய் நீரில் மூழ்கி வாலிபர் பலி

மதுரையை அலங்காநல்லூர் அருகே கால்வாயில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;

Update: 2025-06-28 05:35 GMT
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த கந்தசாமி,( 33) என்பவர் இருசக்கர வாகனம் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் நேற்று (ஜூன்.27) மாலை அலங்காநல்லூர் அருகேயுள்ள அழகாபுரி பெரியாற்று கால்வாயில் குளிப்பதற்காக நண்பருடன் சென்றுள்ளார். அப்போது இவருக்கு நீச்சல் தெரியாத நிலையில் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News