திருவேங்கடம் வட்டாட்சியரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு
வட்டாட்சியரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் உள்ள ஆவுடையாபுரம் ரோட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் இன்று அமைச்சர் மூலம் திறக்கப்பட்டது. இதில் புதியதாக திறக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மக்கள் நடந்து சென்று 3 நான்கு சுடுகாடுகளை தாண்டி செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால் மக்கள் அச்சமின்றி வட்டாச்சியர் அலுவலகம் வந்து செல்ல மாற்று பாதை அமைக்கவும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள மது கடையை அகற்ற வேண்டுமென பாஜக தென்காசி மாவட்ட துணைத் தலைவர் புலிகுட்டி மற்றும் குருவிகுளம் முன்னாள் வடக்கு மண்டல் தலைவர் ராமசந்திரன் தலைமையில் திருவேங்கடம் வட்டாட்சியர் செல்வக்குமரிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.