ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் கோரிக்கை

சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் கோரிக்கை;

Update: 2025-06-28 08:44 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட மேல பட்ட முடையார்புரம் கிராமத்தில் இருந்து ஊருக்கு வடக்கே விவசாய விளை நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் கழுநீர்குளம் இராஜபாண்டி கிராமங்கள் வழியாக செல்லும் சிற்றாறு வடிநில கோட்டம் மாறாந்தை கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க விவசாயிகள் பொதுமக்கள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர், அதனையடுத்து ஆலங்குளம் எம்எல்ஏ தென்காசி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சண்முகவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெத்தநாடார்பட்டி ராதா கழுநீர்குளம் செல்லப்பா மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் மாறாந்தை கால்வாய் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாலம் அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொண்டர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் சமூக அறிவியல் கலந்து கொண்டனர்.

Similar News