பெண்கள் குறித்து அவதூறு: பயில்வான் ரெங்கநாதன் மீது புகார்

பையில்வான் ரங்கநாதன் பெண்களை இழிவு படுத்தி பேசுவதாக கூறி, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் காவல் ஆணையாளரிடம் புகார்.;

Update: 2025-06-28 08:49 GMT
நடிகர் பயில்வான் ரெங்கநாதன் பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாக கூறி, கோவைையைச் சேர்ந்த வக்கீல்கள் பிரவீன், பிரியங்கா, சுவாதி உள்ளிட்டோர் மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரிடம் புகார் மனு அளித்தனர். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசி வருவது, சமூக வலைதளங்களில் தவறான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், அவரது பேச்சுகள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்றும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News