ஆதிதிராவிடர் நலக்குழு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்என ஆட்சியர் தெரிவித்தார்;

Update: 2025-06-28 08:49 GMT
தென்காசி மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு மற்றும் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக விரும்பும் சமூக ஆர்வலர்கள் விண்ணப்பபடிவத்தை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார் ஆதி திராவிட மக்களின் நலனை பேணும் பொருட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான ஆதி திராவிட நலக்குழு அமைக்கப்பட்டுள்ளது, வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களை பாதுகாத்திட வன்கொடுமை தடுப்பு விதிகளின் படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது, இக்குழு ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் விடுதிகள் நூலக மேம்பாடு விளையாட்டு வசதிகள் மாணாக்கர்களின் கல்விதரம் தேர்வு ஆயத்த பயிற் சிகளுக்கு உறுதுணை நல்கல் தாட்கோ திட்டங்களை பரப்பும் வகை செய்தல் ஆதிதிராவிடர் மேம்பாடு குறித்து பொதுவான ஆலோசனை வழங்கல் முதலிய பணிகளை செய்து வருகிறது தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது இக்குழுக்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்பட வேண்டும் அவ்வகையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக விரும்பும் சமூகஆர்வலர்கள் விண்ணப்பபடிவத்தை தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பங்கள் 30.06.2025-க்குள் (நாளை மறுநாள் திங்கட்கிழமை) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்

Similar News