சாலை மற்றும் அங்கன்வாடி அமைக்க நடந்த பூமி பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு

மதுரை தெற்கு தொகுதியில் இரண்டு வார்டுகளில் புதிய சாலை மற்றும் அங்கன்வாடி அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ பூமிநாதன் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-06-28 13:04 GMT
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 30 மற்றும் 43 ல் சாலை மற்றும் அங்கன்வாடி அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று (ஜூன்.28) எம்எல்ஏ பூமிநாதன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. உடன் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் வசந்தா தேவி, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர்கள், திமுக, மதிமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News