நீலகிரி மாவட்டம் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் உள்ள வேகத்தடையில் ஆம்புலன்ஸ் ஏறி இரங்கும் போது வெளியே விழுந்த நோயாளியின் சிசிடிவி படக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத
தற்போது வைரலாகி வருகிறது;
நீலகிரி மாவட்டம் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் உள்ள வேகத்தடையில் ஆம்புலன்ஸ் ஏறி இரங்கும் போது வெளியே விழுந்த நோயாளியின் சிசிடிவி படக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் ஓட்டுப்பட்டறையில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட வரை குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அப்போது குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது வேகத்தடையில் ஏறி, இறங்கியது, அப் போது ஆம்புலன்ஸின் பின் கதவு திறந்து, ஸ்டெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார். இதனை கண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.