நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொட ர் மழையால் கூடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை;
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொட ர் மழையால் கூடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உதகை, கூடலூர் ,பந்தலூர், பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் ஆரூட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்த வினோத் (எ) குட்டன் (26) தேயிலைகளை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் . இவர் வழக்கம்போல் பணிக்கு மதியம் 2 :00 மணிக்குச் செல்லும் குட்டன் இன்று பணிக்கு செல்லாததால் அவரது குடும்பத்தினரும் தொழிற்சாலையிலிருந்து ஊழியர்களும் அவரை தொடர்பு கொண்டனர் அப்போது தொலைபேசி ரிங் சென்றுள்ளது ஆனால் குட்டன் செல்போனை எடுக்கவில்லை இதனால் குடும்பத்தாரும் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களும் வீட்டிற்குச் சென்று பார்க்கும் போது வீடு இடிந்து விழுந்து மண்ணுக்குள் சிக்கி குட்டன் உயிரிழந்த நிலையில் கிடந்தார் உடனே அவரின் உடல் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.