அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.
அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் அஞ்செட்டியை அடுத்துள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன். இவா் வாரிசு சான்றிதழ் கோரி சாலிவாரம் வி.ஏ.ஒ. கிராம ஆன்லைனில் விண்ணப்பித்தார். இந்த நிலையில், வி.ஏ.ஓ லட்சுகாந்தை நேரில் சந்தித்து சான்றிதழ் தொடா்பாக பேசிய ஜெயராமனிடம் லஞ்சமாக 6000 ரூபாய் தரவேண்டும் என லட்சுமிகாந்த் கேட்டுள்ளார். முன்பணமாக1,500 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார்.இதனால் அதிருப்தியடைந்த ஜெயராமன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார் . போலீசாரின் ஆலோசனையின் பேரில் மீதமுள்ள பணத்தை லட்சுமிகாந்திடம் ஜெயராமன் வழங்கிய போது மறைந்திருந்த போலீசார், லட்சுமிகாந்தை கைது செய்தனா்.