மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உத்திரம் விழா.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆணி உத்திரம் விழா நடைபெற உள்ளது;

Update: 2025-06-29 03:26 GMT
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி உத்திரம் தினமான ஜூலை 2-ந் தேதி அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர், சிவகாமிக்கும் கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமியம்மனுக்கு கோவில் இரண்டாம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறுகிறது அபிசேகம் முடிந்து அதிகாலை 5.00 மணிக்கு பள்ளியறை பூஜை 6.00 மணிக்கு பள்ளி எழிச்சி நடைபெற்று காலை 7:30 மணிக்கு பஞ்ச சபை நடராஜர், சிவகாமியம்மன் மாசி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது. ஆனி திருமஞ்சனம் அபிஷேக திரவிய பொருட்களை ஜூலை 1-ந் தேதி இரவு 7 மணிக்குள் பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் வழங்கலாம்.

Similar News