கன்னடத்தில் பேசிய விவசாயி – காட்டு யானை நோக்கிச் சொன்ன வார்த்தைகள் வைரல்!

கோவை, தடாகம் சீட்டுக்காரர் தோட்டத்தில், ஒற்றை காட்டு யானை ஒன்று பயிர் நிலத்துக்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2025-06-29 04:16 GMT
கோவை, தடாகம் சீட்டுக்காரர் தோட்டத்தில், நேற்று இரவு ஒற்றை காட்டு யானை ஒன்று பயிர் நிலத்துக்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அங்கிருந்த விவசாயி ஒருவர், கன்னடத்தில் "ஒன்னும் இல்லை இங்கு போ, போ நேரா போ" என யானையிடம் பேசுவதைக் குடும்பத்தினர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வருடங்களின் வறட்சியால் ஊர்களை நோக்கி வந்த யானைகள், தற்போது வனப்பகுதியில் உணவுக்காக மீண்டும் ஊருக்குள் நுழையத் தொடங்கியுள்ளன. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகளின் அட்டூழியங்களை தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News