எழுமலையில் நர்சிங் மாணவி மாயம்
மதுரை உசிலம்பட்டி அருகே நர்சிங் படித்து வரும் மாணவி மாயமென போர் அடிக்கப்பட்டது;
மதுரை அருகே எழுமலை கோடாங்கிநாயக்கன்பட்டி மேல தெருவில் வசிக்கும் விஜயனின் 18 வயது மகள் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஜூன் .28) அவரது தாயார் அம்பிகாவதி எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.