குன்றத்தூரில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ
குன்றத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை திடீர் தீ விபத்து போலீசார் விசாரணை;
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கேவல்சன், 31. சோமங்கலம் அடுத்த நல்லுாரில், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இந்த கடையில் இருந்து புகை வெளியே வருவதை பார்த்தவர்கள், கடையின் மேல் தளத்தில் வசிக்கும் கேவல்சனிடம் தெரிவித்தனர். இதையடுத்து கடையை திறந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தார். இதில், கடையில் உள்ள பொருட்கள், லேசான சேதத்துடன் தப்பின. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.