காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.;
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டும் நிலையில் உள்ளது. அணையிலிருந்து எந்நேரமும் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படலாம். திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். எனவே காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், தங்கள் உயிர், உடைமைகளின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என நீர் வளத்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் தவமணி, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள், காவிரி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்களிடம், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டனர். இது குறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது: குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள பொதுமக்களை பாதுகாக்க, பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. வருவாய்த்துறையினர், போலீசார், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.