தேவாங்கர் சார்பில் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் விழா
குமாரபாளையத்தில் தேவாங்கர் சமுதாயம் சார்பில் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடந்தது.;
குமாரபாளையம் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தேவாங்க மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு, நோட்டு புத்தகங்கள், தேவாங்கர் சமுதாய நெசவு தொழில் சார்ந்த ஆண், பெண்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் விழா தலைமை மன்ற ஆலோசகர் மாணிக்கம் தலைமையில் நடந்தது. சங்க செயலர் நடராஜ பெருமாள் வரவேற்றார். ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, தொழிலதிபர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கப்பரிசு, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், நெசவாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள். 10, 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்கள் பேசியதாவது: இந்த விழாவால் எங்களுக்கு மேலும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.