கடலூர் அருகே பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
கடலூர் அருகே பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
ரெட்டிச்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்அழிஞ்சிப்பட்டு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு போதை தடுப்பு, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கியும், பென்சில், பேனா, ஸ்கேல் உள்ளிட்ட எழுது பொருள்கள் மற்றும் கால்பந்து, இறகுபந்து, கிரிக்கெட் மட்டை, பந்து, கேரம் போர்டு விளையாட்டு உபகரணங்கள் காவல் ஆய்வாளர் பிரேம்குமார் காவல்துறை சார்பாக வழங்கினார்.