பைக் விபத்தில் ஒருவர் பலி!
வேலூரில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (52). இவர், ரங்காபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி பைக்கில் சென்றபோது சத்துவாச்சாரி அருகே திடீரென மாடு குறுக்கே வந்தது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் ,அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.