முன்னாள் நகர்மன்ற தலைவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அமைச்சர்
மதுரை மாவட்டம் மேலூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் அவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்;
மதுரை மாவட்டம் மேலூர் மேலூர் நகர திமுக முன்னாள் செயலாளரும் மேலூரின் முன்னாள் நகர் மன்ற தலைவருமான கொன்னடியான் அவர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வில் வீட்டில் உள்ளார். அவரை நேற்று (ஜூன்.29) மேலூர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கென்னடியான் குடும்பத்தினர் இருந்தனர்.