மேலவளவில் நினைவஞ்சலி செலுத்திய திருமாவளவன்

மதுரை மேலூர் மேலவளவில் திருமாவளவன் நினைவஞ்சலி செலுத்தினார்.;

Update: 2025-06-30 09:15 GMT
மதுரை மாவட்டம் மேலவளவில் 1997 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக உயிர்நீத்த போராளிகள் மாவீரன் மேலவளவு முருகேசன், செல்லத்துரை, முருகேசன் தம்பி க.ராசா, சேவுகமூர்த்தி, கொ.மூக்கன், மூ.பூபதி, ஆ.சவுந்தரபாண்டி ஆகிய அரசியல் உரிமை மீட்புப் போராளிகளின் 28 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (ஜூன்.30) மேலூர் அருகே உள்ள மேலவளவில் விசிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைக் களத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி திருமாவளவன அஞ்சலி செலுத்தினார். உடன் விசிக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News