பசுமலையில் திமுகவினரின் பூத் கமிட்டி கூட்டம்.

மதுரை பசுமலை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருப்பரங்குன்றம் பகுதி கூட்டு கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-30 13:25 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை கோபால்சாமி திருமண மஹாலில் நேற்று (ஜூன் 29) மாலை மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் பாக முகவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் பாகம் முகவர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சட்டமன்ற தொகுதியில் உள்ள 297 பாகங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அனைத்து நிர்வாகிகள் ஒன்றிணைந்து அவரவர் வாக்குச்சாவடிகளில் வாக்களின் உபர் இல்லத்திற்கும் சேர்ந்து சந்தித்து திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை எடுத்து கூற வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் பூத்து கமிட்டி உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News