உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டம்
மதுரையில் உழவர் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது;
இயற்கை விவசாயத்தை தீவிரமாக செயல்படுத்த விவசாயிகளுக்கு திறனதிகாரமளிப்பது’ என்ற தலைப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முதன்மை புரவலராகக் கொண்டு, அமுல் மற்றும் ரிச்பிளஸ் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன், மதுரையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த FPO மாநாட்டை இன்ஃபினிட் சேவா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPO) தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய இயற்கை / ஆர்கானிக், விவசாயத்தை ஊக்குவிக்கும் இந்தியாவின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலுமிருந்து 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.