குவாரி பள்ளத்தில் மூழ்கிய வடநாட்டு வாலிபர் பலி
மதுரை மேலூர் அருகே குவாரி பள்ளத்தில் மூழ்கிய வடநாட்டு வாலிபர் பலியானார்.;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் பையான்( 30) என்பவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்துள்ளார். இவர் அம்மன் கோவில்பட்டி பகுதியில் உள்ள செயல்படாத குவாரியில் நேற்று முன்தினம் (ஜூன்.29)குளிக்க சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.