சாலையில் வீணாக செல்லும் குடிநீர்!
சாலையில் வீணாக செல்லும் குடிநீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.;
வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.