நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
மதுரை சோழையழகுபுரம் பகுதியில் அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்;
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோலைஅழகுபுரம் பகுதி வார்டு என் 80ல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்து, எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் நேற்று ( ஜூன்.30) நலத்திட்ட உதவிகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.