குழந்தை இல்லா ஏக்கத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை.
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பூதக்குடியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜேஸ் கண்ணன்( 36) என்பவர் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகியும் இவருக்கு குழந்தை இல்லை.இதனால் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.இந்நிலையில் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.