கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!
கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று (ஜூலை-1) காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் லத்தேரி திருமணி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று (ஜூலை-1) காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.இதில் கிருஷ்ணர் ருக்மணி சத்தியபாமா சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையில் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.