வேலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர்!
வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார்.;
வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 1) இரவு 8:30 மணியளவில் வருகை தர உள்ளார். அவருக்கு மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பம் பகுதியில் திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை (ஜூலை 2) காட்பாடியில் நடைபெறும் திமுக பகுதி செயலாளர் வன்னியராஜ் இல்ல திருமணத்தில் பங்கேற்க உள்ளார்.