அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிமுக பயிற்சித் திட்ட முகாம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சித்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு நடந்தது.;

Update: 2025-07-02 13:22 GMT
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சித்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. தமிழ் துறை தலைவர் முரளிதரன், உயர்கல்வி துறையின் நிர்வாக கட்டமைப்பு பற்றி பேசினார். இதில் நிர்வாக கட்டமைப்பில் முதலாவதாக முதலமைச்சர், அடுத்ததாக உயர்கல்வி துறை அமைச்சர் , உயர்கல்விச் செயலர், கல்லூரி கல்வி ஆணையர், இணை இயக்குனர்கள், மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் பொறுப்பில் கல்லூரி இயங்கி வருகிறது என்பதையும், கல்லூரியின் நிர்வாக படிநிலை பற்றியும் தெளிவாக விளக்கினார். தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் சமுகத்தில் பழக வேண்டிய விதங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். ஆங்கில துறை தலைவர் பத்மாவதி ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுகளுடன் பேசினார். ஆங்கில மொழியின் உலகளாவிய சிறப்புகளை கூறினார். ஆங்கில மொழி வேலை வாய்ப்புகளை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்றார். வணிக நிர்வாகவியல் துறை கண்ணன், முதலமைச்சர் கனவு திட்டம், நான் முதல்வன் திட்டம் பற்றி பேசினார். இத்திட்டத்தின் கீழ் ஒவொரு பருவத்திலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு பயிற்சிகள் வழங்கபடுகிறது என்றார். இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் மகாலிங்கம் பங்கேற்று, கல்லூரியின் பாடத்திட்டம், அகமதிபீட்டுத் தேர்வு குறித்த விழிப்புணர்வு, பல்கலைக்கழக செய்முறை தேர்வு, இரு பருவ தேர்வு முறை மற்றும் மதிப்பீட்டு முறை பற்றி மாணவர்களுக்கு கூறினார்.

Similar News