மினி பேருந்து ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள் .
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக தங்கள் கிராமத்திற்கு வந்த மினி பேருந்தை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர்..;
அரியலூர, ஜூலை.2- நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக தங்கள் கிராமத்திற்கு வந்த மினி பேருந்தை ஆரத்தி எடுத்து கை தட்டி உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்றனர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அடிக்காமலை கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் முறையான போக்குவரத்து வசதி இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் சில கிலோமீட்டர் நடந்து சென்று பொது போக்குவரத்தை பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் நாயகனைபிரியாள் கிராமத்திலிருந்து தா.பழூர் வழியாக அடிக்காமலை கிராமத்திற்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் புதிய வழிதடத்தில் மினி பேருந்து சேவையை நாயகனைப்பிரியாள் கிராமத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.அடிக்காமலை கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு மினிபேருந்து வருவதை அறிந்து ஆச்சர்யமுடன் மிகுந்த உற்சாகத்தில் ஆரத்தி எடுத்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்த கிராமத்திற்கு புதிய மினி பேருந்து சேவை தொடங்கி வைத்ததற்கு கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்தனர்.