வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.;
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற செப்.30 வரை மாற்றுத்திறனாளி பயணிகள், தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 2) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாற்றுதிறனாளிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.