ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு!
காங்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று ( ஜூலை 2 ) கே.வி.குப்பம் தாலுக்கா காங்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மருத்துவமனையில் மருந்து இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.