இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த மூவர் கைது.

மதுரை மேலூர் அருகே இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்;

Update: 2025-07-04 03:43 GMT
மதுரை மேலுார் வல்லாளபட்டியை சேர்ந்த 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போது அதே ஊரைச் சேர்ந்த தீபன் ராஜூவுடன் (25) ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை .2) இரவு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர். அதேநேரம் தீபன் ராஜூவின் நண்பர்கள் சுகுமாறன் (24) மதன் (25) ஆகியோர் சென்று அவர்களும் அப்பெண்ணை தொந்தரவு செய்துள்ளனர். இத்தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே போலீசில் புகார் கொடுத்தனர். மூவரையும் மேலூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Similar News