ஆசிரியை அடித்ததால் மாணவர்கள் போராட்டம்

மதுரை உசிலம்பட்டி அருகே ஆசிரியை அடித்ததால் பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2025-07-04 09:36 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் பள்ளியில் 150 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் மின்னாம்பட்டியிலிருந்து 30க்கு மேற்பட்டவர்கள் இப்பள்ளியில் படிக்கிறார்கள். இவர்கள் கிராமத்தில் பேருந்து வசதி தடைப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் பள்ளியின் தற்காலிக ஆசிரியை நிறைமதி அடித்ததாக தெரிகிறது. இதனால் இன்று (ஜூலை 4 ) மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்து கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த ஆசிரியை பணணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறியதால் பள்ளிக்கு சென்றனர்.

Similar News