கோவை: மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் வண்ண ஆடையில் வள்ளி கும்மி நடனம்!
மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நிற வண்ண ஆடையில் பாரம்பரிய வள்ளி-கும்மி நடனம் ஆடி, பக்தர்களை கவர்ந்தனர்.;
கோவை அப்புலுபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் திருவிழா 13ஆம் ஆண்டாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நிற வண்ண ஆடையில் பாரம்பரிய வள்ளி-கும்மி நடனம் ஆடி, பக்தர்களை கவர்ந்தனர். இந்த நடனம் மூலம் பாரம்பரிய கலையை மீட்டெடுக்க விழா வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக கலைஞர்கள் தெரிவித்தனர்.