பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சினேகா குடும்பம்!
புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடிகை சினேகா, தனது கணவர் பிரசன்னாவுடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.;
புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடிகை சினேகா, தனது கணவர் பிரசன்னாவுடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். 2ம் நூற்றாண்டில் சோழர்கோன் கரிகாலனால் கட்டப்பட்ட இந்த கோவில், அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவரால் பாடப்பெற்றது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக், நடிகர் சூர்யா மற்றும் யோகி பாபுவும் தரிசனம் செய்துள்ளனர். நடிகை சினேகாவை கண்ட பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மனையை தரிசனம் செய்கின்றனர்.