ஒரணியில் தமிழ்நாடு என்னும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தமிழக வருவாய்த்துறை அமைச்சர்பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
ஒரணியில் தமிழ்நாடு என்னும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சந்திரன் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை விளக்கி அதன் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.;
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக சார்பில் தொடங்கப்பட்டு உள்ள ஒரணியில் தமிழ்நாடு என்னும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சந்திரன் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை விளக்கி அதன் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் உறுப்பினர் சேர்க்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் அரசியல் சார்பு இல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி எல்லோரும் இணைந்து தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும் வரக்கூடிய ஆபத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாட்டு மக்கள் மத்தியில் விதைத்திருக்கிறார்கள் என்றார். மேலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களின் கருத்துகளை கேட்டு அதனை தலைமைக்கு அனுப்பி வைத்து விரைவில் சரி செய்யப்படும் என்றார். மேலும் திமுக சார்பில் தொடங்கப் பட்டு உள்ள ஓரணியில் தமிழ்நாட்டிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றார். மேலும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் இந்தியை நாங்கள் கட்டாயப்படுத்தி திணிக்க வில்லை என வானதி சீனிவாசன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என்றார். மேலும் மத்திய அரசு இந்திக்கு பணம் ஒதுக்குவதும் தமிழுக்கு பணம் ஒதுக்காமல் இருப்பதும் சமஸ்கிருத மொழிக்கு பணம் ஒதுக்குவதும் தமிழ் மொழிக்கு பாரபட்சமாக இருப்பதெல்லாம் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள் எனவும் பாஜகவை சார்ந்தவர்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருப்பார்கள் எனவும் அவர்களின் கொள்கை பொய் சொல்ல வேண்டும் அல்லது மத கலவரத்தை தூண்ட வேண்டும் இந்த இந்த காரியங்களை தொடர்ந்து செய்வார்கள் ஆனால் இது தமிழ் மண்ணில் எடுபடாது என்றார். மேலும் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் திருப்புவனம் அஜித் குமார் உயிரிழப்பு சம்பவத்தில் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருந்து இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது நியாயமாக இருந்திருக்கும் என்றார். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றார். மேலும் அந்த வழக்கை காவல் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி இருக்கிறார்கள் என்றார். மேலும் அஜித்குமார் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் எல்லாம் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார் கள் எனவே அஜித்குமாரின் ஆன்மா தவறு நடந்திருந்தாலும் முதல்வர் அதனை சரி செய்கிறார்கள் என்ற ஆத்ம திருப்தி அந்த ஆன்மாவுக்கு வரும் என்றார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து விட்டு தொலைபேசியில் சம்பவத்திற்காக வருந்துகிறேன் என மனிதாபிமானத்தோடு பேசிய முதல்வர் திறந்திருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்றார் மேலும் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஜூலை 15ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முகாம் நடத்தப்பட இருப்பதாகவும் அந்த முகாமிற்கு பொதுமக்களை வர வைப்பதற்காக அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து முகாமுக்கு வரவைத்து யார் யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார்