அரசு பள்ளி மாணவர்களுக்கு மாடர்ன் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
ஜெயங்கொண்டம் பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு மாடர்ன் கல்வி குடும்பத்தின் சார்பில் முதலாம் ஆண்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.;
அரியலூர், ஜூலை.4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மாடர்ன் கல்விக் குழுமம் சார்பில் மகிமைபுரம் பல்கலை நகரில் உள்ள பி எம் பப்ளிக் ஸ்கூலில் மாடர்ன் கல்வி குழுமத்தின் முதலாம் ஆண்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்து. நிகழ்ச்சிக்கு மாடர்ன் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் சொ.பழனிவேல் தலைமை தாங்கினார். விழாவிற்கு. மாடர்ன் கல்வி குழும துணைத் தலைவர் எம்.கே.ஆர். சுரேஷ், செயலாளர் இலக்கியாசுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் அரியலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களை பாராட்டி மாடர்ன் சாதனையாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கல்வி பயின்று சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்கள் என 40 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பரிசுகள் மற்றும் பாராட்டு மாடர்ன் சாதனையாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், பி எம் பப்ளிக் ஸ்கூல் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் முடிவில் பிஎம் பப்ளிக் பள்ளி முதல்வர் விஜயசாரதி நன்றி கூறினார் .